டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை கோரி தமிழக அரசும், டாஸ்மாக் நிறுவனமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. அமலாக்கத்துறையின் இந்த சோதனை அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்றைய விசாரணையில் டாஸ்மாக் முறைகேடு புகாரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.