தமிழகத்தில் ரயிலை கவிழ்க்க சதி?

61பார்த்தது
தமிழகத்தில் ரயிலை கவிழ்க்க சதி?
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கற்கள் இருந்ததைக் கண்டு ரயிலை நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மங்களூரு செல்லும் பரசுராம் ரயிலின் லோகோ பைலட் ரயிலை துரிதமாக செயல்பட்டு நிறுத்தினார். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேண்டுமென்றே ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டதா? அல்லது சிறுவர்கள் யாரேனும் கற்களை வைத்தார்களா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

தொடர்புடைய செய்தி