திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா சின்னவீரம்பட்டி கிராமத்தில் மண்பரிசோதனை அட்டை அடிப்படையிலான ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பில் பண்ணை பள்ளி வகுப்பானது. இன்று (செப் -26) ஆரம்பிக்கப்பட்டது.
உதவி வேளாண்மை அலுவலர் பாலசுப்பிரமணியம் சின்னவீரம்பட்டி கிராமத்திற்கு உண்டான திட்டங்கள் பற்றியும் கிடங்கில் உள்ள இடுபொருட்கள் பற்றியும், மீன் அமிலம் தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். வேளாண்மை உதவி இயக்குநர் எஸ். தேவி பயிர் விளைச்சல் போட்டிக்கு விண்ணப்பம் பதிவு பற்றியும், பயிர் காப்பீடு, உரப்பயன்பாடு பற்றியும், துவரை பயன்பாடு பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.
திருப்பூர் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர், விஜயலட்சுமி மண் பரிசோதனை பற்றியும், மண்ணின் தன்மைகள், மண் எவ்வாறு நிலத்தில் எடுப்பது பற்றிய செயல் விளக்கத்திடலும் மண் ஆய்வு முடிவுகளில் வரும் பேரூட்டச் சத்துகள், நுண்ணுணூட்டச் சத்துகள் மற்றும் நுண்ணுயிர் உரம் இடுவது பற்றி எடுத்து உரைக்கப்பட்டது. வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை வட்டார தொழில்நுட்ப மேலாளர் உமாசாலினி பண்ணைப்பள்ளி வகுப்புகள் பற்றியும், இதனால் விவசாயிக்கு கிடைக்கும் பலன்கள் பற்றியும் எடுத்து உரைத்தார். இந்த நிகழ்வில் உதவி தொழில்நுட்ப மேலாளர் கவிமலர் மனோஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.