செல்போன் திருடிய இளைஞரை பிடித்து அடித்து துவைத்த பொதுமக்கள்.

56பார்த்தது
திருப்பூர்செல்போன் திருடிய இளைஞரை பிடித்து அடித்து துவைத்த பொதுமக்கள். செருப்பை கழட்டி விளாசிய பெண்.

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று பேருந்துக்காக குழந்தையுடன் காத்திருந்த வடமாநில பெண்ணை கீழே தள்ளி அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓடமுயன்ற நபரை பிடித்து பொதுமக்கள் அடித்து துவைத்தனர். அங்கிருந்த பெண் ஒருவர் தான் அணிந்திருந்த செருப்பை கழட்டி திருடிய நபரை அடித்து விளாசினார். தொடர்ந்து பொதுமக்கள் அந்த நபரை தாக்கிய நிலையில் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடமிருந்து திருடனை மீட்டு விசாரித்ததில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பதும் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் செல்போனை பறிக்கும் என்றதும் தெரியவந்தது இதனை அடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி