நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த படகு.. மீனவர்களின் நிலை என்ன?

82பார்த்தது
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் படகு தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புடிமடக்கா கடல் பகுதியில் மீனவர்கள் சிலர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, படகில் திடீரென தீப்பற்றியது. இதனைக் கவனித்த மீனவர்கள், உடனடியாக கடலில் குதித்து உயிர் தப்பினர். பின்னர், அவர்கள் பத்திரமாக மற்றொரு படகு மூலம் மீட்கப்பட்டுள்ளனர். உணவு சமைக்க எடுத்துச் சென்ற சிலிண்டரால் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி