தமிழக விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்

69பார்த்தது
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் திருப்பூரில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்

வேலன் விளைப் பொருள்களுக்கு ஆதார விலை , விவசாய கடன் தள்ளுபடி , விவசாயிகளுக்கு ஓய்வூதியம் , மின்சார சட்ட திருத்த மசோதா ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் விவசாயிகளின் போராட்டத்தை கலைக்க மத்திய அரசு ராணுவத்தின் மூலம் கண்ணீர் புகை கொண்டு வீசுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாக ஒரு விவசாயி உயிரிழந்தார். இதற்கு கட்டணம் தெரிவித்தும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் , திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அமைப்பினர் திருப்பூர் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூருக்கு வருகை தரும் பிரதமர் மோடி விவசாயிகளின் போராட்டத்திற்கு நல்ல தீர்வை தருவார் என எதிர்பார்ப்பதாகவும் பேட்டி அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி