தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் புலம் பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் அப்போது பட்டாசுகளை வாங்கிக் கொண்டு ரயில் மூலம் செல்வதால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது எனவே ரயிலில் கொண்டு செல்லக்கூடிய பொருட்கள் மற்றும் கொண்டு செல்லக்கூடாத பொருட்கள் என்னென்ன எளிதில் தீப்பிடிக்கும் பட்டாசு போன்ற பொருட்களை கண்டிப்பாக கொண்டு செல்லக்கூடாது என்பதை பொது மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகளிடம் ரயில்வே போலீசார் ரயில் போன்ற பொது போக்குவரத்தில் கண்டிப்பாக கொண்டு செல்லக்கூடாத பொருட்கள் குறித்து விளக்கப்பட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.