மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் கார்த்திகை நட்சத்திரத்தின் போது முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்துருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். அக்., 19 ஐப்பசி 2ஆம் தேதி கார்த்திகை நட்சத்திர தினத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்ற பின்னர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.