காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் திருப்பூர் சிடிசி கார்னர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் பொழுது பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதலுக்கு கடும் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் 3வது தீர்மானத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக திருப்பூரில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.