கோவை அரசு போக்குவரத்து கழக தலைமையகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் ரகுராம் என்பவர் நேற்று முன்தினம் கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பேருந்தைபயணிகளுடன் இயக்கி வந்தார். இந்த பேருந்து திருப்பூர் காந்திநகர் சிக்னல் பகுதியை வந்தடைந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஓட்டுநர் உடன் தகராறு செய்து பேருந்தில் ஏறி ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த போது அவரது மடியில் அமர்ந்து பேருந்து எடுக்க விடாமலும் மது போதையில் அவரோடு தகராறு செய்துள்ளார். மேலும் பேருந்தை எடுக்க விடாமல் அந்த நபர் தகராறு செய்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது சிக்னலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து தகராறுகள் ஈடுபட்ட நபரை பிடித்து வெளியேற்றினர். பின்னர் இதுகுறித்து ஓட்டுநர் ரகுராம் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பிரதீப் என்ற நபரை பிடித்து விசாரித்தனர் அவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பேருந்தை மோதுவது போல இயக்கியதால் பேருந்து ஓட்டுனர் இடம் முறையிட்டதாக கூறியுள்ளார் எனினும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் பிரதிப்பை கைது செய்து ஜாமீனில் விடுதலை செய்தனர்.