உடுமலையில் மே தினத்தன்று மது விற்பனை அமோகம்!!

59பார்த்தது
உடுமலையில் மே தினத்தன்று மது விற்பனை அமோகம்!!
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்ற டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளுக்கு மே தினத்தை முன்னிட்டு நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது. ஆனால் வழக்கம் போல் டாஸ்மாக் கடைகளை மையமாகக் கொண்டு சில்லறை மது விற்பனை தாராளமாக நடைபெற்றது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், உழைக்கும் வர்க்கத்திற்காக போராடிய தியாக சீலர்களின் நினைவை போற்றும் வகையில் மே மாதம் முதல் தினத்தன்று விடுமுறை விடப்படுகிறது. அதை ஒட்டி டாஸ்மாக் கடைகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது. இந்த சூழலில் அனுசம் திரையரங்கம் பின்புறம் அரசு மதுபான கடை முன்பு , யூனியன் ஆபீஸ் , மலையாண்டிகவுண்டனூர் செல்லும் வழியில் உள்ள அரசு மதுபான கடை உள்ளிட்ட உடுமலையின் முக்கிய பகுதியில் சில்லரை அது விற்பனை அமோகமாக நடைபெற்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு போலீஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. இலை மறைவு காயாக நடைபெற்று வந்த அது விற்பனை இன்று வெட்டவெளியில் விடுமுறை தினத்தன்றும்கூட இடைவிடாத நடைபெற்றது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே உடுமலை பகுதியில் இன்று மது விற்பனையில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி