பல்லடத்தில் முதல்முறையாக நடைபெற உள்ள மாபெரும் ரேக்ளா பந்தய போட்டி.
தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்லடம் நகர திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பல்லடத்தில் முதல்முறையாக மாபெரும் ரேக்ளா போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என இரண்டு பிரிவுகளாக ரேக்ளா போட்டி நடைபெற உள்ளது. மரப்பாலம் முதல் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் வரை இந்த ரேக்ளா போட்டு நடைபெற உள்ளது. நிலையில் இன்று ரேக்ளா போட்டி நடைபெறும் இடத்தில் பல்லடம் நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கால்கோல் நடும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் பல்லடம் நகரத் தலைவர் ராஜேந்திரகுமார், பல்லடம் நகர திமுக நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு கால்கோலை நட்டனர். மேலும் பார்வையாளர்களுக்கு ஏதுவாக சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ரேக்ளா போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு தங்க நாணயம், மற்றும் ஏராளமான பரிசு பொருட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் கலந்து கொள்வதற்கான முன்பதிவு நாளை ரேக்ளா கிளப் இணையதளத்தில் தொடங்க உள்ளது. நான் இருக்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் இந்த போட்டியில் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.