திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று தம்பிரான் குடில் அறக்கட்டளை சார்பில் இன்று உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் 100 பேருக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைச் சாமான்களை அறக்கட்டளை நிறுவனர் தம்பிரான் ரிஷபானந்தர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது. பின்னர் அவர் பேசும்போது இயன்றதைச் செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற அடிப்படையில் தன்னால் இயன்றவரை தூய்மைக்காவலர்களுக்கும் ஆதரவற்ற ஏழைகளுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தொடர்ந்து சேவை செய்து வருவதாகக் கூறினார்.
மேலும் அறக்கட்டளை சார்பில் சென்னை, திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது இந்த அறக்கட்டளையின் நோக்கம் என்று தெரிவித்தார். நிகழ்வில் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கோவிந்தராஜ், நிர்வாகிகள் திவ்யா, திருப்பூர் நாகராஜ் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உடுமலை ஜானகிராமன் சிவகுமார், உடுமலை சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.