குப்பைகளுடன் வட்டாட்சியர் அலுவலகம் வந்த மக்கள்

63பார்த்தது
திருப்பூர் மாவட்டம் கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அருள்புரம் செல்லும் வழியில் அமைந்துள்ள நீர்வழிப் பாதையில் கரைப்புதூர் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் தேவையற்ற கழிவுகளை கொட்டி வருவதாகவும் , நீர்வழிப் பாதையில் குப்பைகளை கொட்டுவதால் அப்பகுதி சுகாதார கேடு ஏற்பட்டு அசுத்தமான நிலையில் உள்ளதாகவும், இந்த குப்பைகளை உண்பதால் அப்பகுதியில் உள்ள ஆடு மாடுகளும் நோய்வாய் ஏற்பட்டு இறந்து விடுவதாகவும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்பட்டு ஊராட்சி நிர்வாகம் நீர் நிலைகளில் குப்பைகளை கொட்டி வருவதாகவும், அப்பகுதி மக்கள் உயர்நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடுத்த நிலையில் எட்டு வாரங்களில் இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இன்று வரை குப்பைகளை அகற்றாமல் ஊராட்சி நிர்வாகம் மெத்தனப்போக்கோடு செயல்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்து இன்று அப்பகுதி மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் கையில் குப்பைகளை ஏந்தியபடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். குப்பைகளை அகற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன் எனவும் வட்டாட்சியரிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி