ஈரோட்டில் இன்று 109 டிகிரி வெயில் பதிவு

70பார்த்தது
ஈரோட்டில் இன்று 109 டிகிரி வெயில் பதிவு
கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் 15 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் மேல் பதிவாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. திருப்பத்தூர், சேலம், வேலூரில் 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
கரூர் பரமத்தி 106, தருமபுரி, திருச்சியில் தலா 105 டிகிரி, மதுரை விமான நிலையம், திருத்தணி, மதுரை நகரம், தஞ்சை, கோவையில் 104 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி