இரண்டு நிமிடம் கைகளை தூக்கியவாறு பத்மாசனம் செய்து உலக சாதனை படைத்த பள்ளி மாணவிகளை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்த பல்லடம் டிஎஸ்பி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் இயங்கி வரும் மூன்று தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளியை சேர்ந்த 9 மாணவிகள் கடந்த ஆண்டு "உலக சாதனை அமைப்பு சார்பில்" இந்தியாவின் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற யோகாசன உலக சாதனை நிகழ்வில் இரண்டு நிமிடங்கள் கைகளை தூக்கியவாறு பத்மாசனம் செய்து உலக சாதனை புரிந்தனர்.
உலக சாதனை படைத்த பல்லடம் பகுதியை சேர்ந்த 9 பள்ளி குழந்தைகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் சார்பில் இன்று சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. உலக சாதனை படைத்த பள்ளி குழந்தைகள் மற்றும் பள்ளி ஆசிரியர்களை நேரில் அழைத்து பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் பல்வேறு சாதனைகளை புரிய வேண்டும் என குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கினார்.