உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த நேஹா (23) என்ற இளம்பெண், வேறு சாதியைச் சேர்ந்த சூரஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு, நேஹாவின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. இந்நிலையில், வீட்டை விட்டி வெளியேறிய நேஹா, மார்ச் 11 அன்று காஜியாபாத்தில் உள்ள கோயிலில் சூரஜை திருமணம் செய்துகொண்டார். இதனையறிந்த பெண்ணின் தந்தை பானுராதோர் மற்றும் அவரது சகோதரர் ஹிமான்ஷுராதோர் ஆகியோர், நேஹாவைப் பிடித்து மார்ச் 12ஆம் தேதி காலை ஆணவக் கொலை செய்தனர். இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.