பச்சை குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் பவனி

56பார்த்தது
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி பெருவிழா கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. 17ஆம் தேதி சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகமும், 18 ஆம் தேதி சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் வைபோகமும், உச்ச நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் 19ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நேற்று (மார்ச் 14) சப்பரத்தில் மூஞ்சூறு வாகனத்தில் விநாயகரும், சண்டிகேஸ்வரரும் வீதி உலா வந்தனர். தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை பச்சை குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தொடர்புடைய செய்தி