தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா சலுகை குறித்து அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழறிஞர்கள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் மற்றும் விருதாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளில், ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு அனுமதிக்கவும், எந்தவித தொய்வும் இன்றி முறையாக, சிறப்பு பயணச் சலுகைகளை வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.