பல்லடம் அருகே கேத்தனூர் பகுதியில் சோளத்தட்டு ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு. சுமார் 50, 000 மதிப்பிலான சோளத்தட்டுகள் எரிந்து சேதம். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்த தீயணைப்பு துறை வீரர்கள்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கேத்தனூர் பகுதியில் சிவக்குமார் என்பவரின் தோட்டத்திலிருந்து சுமார் 50, 000 ரூபாய் மதிப்பிலான சோள தட்டுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தோட்டத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தது. அப்போது லாரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கவே அங்கு விரைந்து வந்த நிலைய அலுவலர் முத்துக்குமாரசுவாமி தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் லாரி முழுவதும் எரியாமல் தவிர்க்கப்பட்டது. மேலும் லாரியில் ஏற்றிக்கொண்டு வந்த சுமார் 50, 000 மதிப்பிலான சோள தட்டுகள் முழுவதுமாக தீயில் கருகியது. பின்னர் இந்த தீ விபத்து தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்லடம் அருகே சோளத்தட்டை ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.