நடிகரும், தவெக தலைவருமான விஜயை அவரது ரசிகர்களும், தொண்டர்களும் ‘தளபதி’ என்று அழைத்து வருகின்றனர். இந்நிலையில் 'அண்ணன்' என்ற அடைமொழியுடன் அரசியலில் விஜய் இனி வலம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தவெகவினர் கூறும்போது, "எங்கள் தலைவரை தளபதி என்றுதான் அழைத்து வருகிறோம், அதேநேரத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் தங்கைகளுக்கும் அண்ணனாக அவர் இருக்கிறார், எனவே அதுவே அடைமொழியாக மாறி வருகிறது" என்றனர்.