திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் காரத்தொழுவு பிரதான சாலையில், கழுகரை பகுதியில், பைபாஸ் சாலை பாலத்தின் அடியில் புதிதாக மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டது. இந்தப் பகுதி மற்ற பகுதிகளை விட தாழ்வாக உள்ளதால் இனி வரும் காலங்களில் அதிக அளவு மழை நீர் தேங்க வாய்ப்பு உள்ளது. அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் மழை நீர் வெளியேற வழி இல்லாமல் தடுப்பணைகளாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.