திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி கோவை திண்டுக்கல்
தேசிய நெடுஞ்சாலையில்,
இரண்டு இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பெருமளவு தண்ணீர் சாலையில் வழிந்தோடு வீணாகி வருகிறது.
இதற்காக சாக்கடை நீர் போல் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே தண்ணீர் தேங்காமல் சாக்கடை
கால்வாய் போல அமைக்கப்பட்ட வடிகாலில் நபர் ஒருவர் தவறி விழுந்தது அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. உடைபட்ட குடிநீர் குழாயை, குடிநீர் வடிகால் வாரியம் சரி செய்யாமல் அலட்சியம் காட்டி வருவதாகவும், இதுகுறித்து உடனடியாக புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். விரைவில் மக்களை திரட்டி இதற்காக போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.