திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே வேடப்பட்டியில் கடந்த 2010 ஆம் வருடம், ராஜன் வயது (45). என்பவர் குடும்பத் தகராறில் மனைவி பத்மாவதி மற்றும் மாமியார் காளியம்மாள் ஆகியோரை அறிவாளால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த காளியம்மாள் (வயது 50) மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதனை அடுத்து ராஜன் தலைமறை வாகினார். தொடர்ந்து ராஜன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, பிடியானை பிறப்பிக்கப்பட்டது.
14 வருடங்களாக இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில், ரகசிய தகவலின் அடிப்படையில், கர்நாடகா மாநிலம் மங்களூர் பகுதியில் பதுங்கி இருந்த ராஜனை மடத்துக்குளம் காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து ராஜன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைக்கு அனுப்பினர். தனிப்படை அமைத்து 14 வருடங்களுக்கு பின் குற்றவாளிகயை கைது செய்த மடத்துக்குளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினருக்கு மாவட்ட காவல் துறை சார்பாக டிஎஸ்பி ஆறுமுகம் பாராட்டு தெரிவித்தார்