திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மடத்துக்குளம் வட்டாரத்திற்கு 2024 -25 ம் நிதியாண்டில், தோட்டக்கலைத் துறைக்கு 200 ஹெக்டருக்கு நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 1 கோடியே 65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்த மானியத்தை பயன்படுத்தி தோட்டக்கலை பயிர்களுக்கு தோட்டக்கலை துறை மூலம் நுண்ணீர் பாசனம் அமைத்துக் கொள்ளலாம். இதில் சிறு விவசாயிகளுக்கு 100% மானியமும் பெரிய விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்படுகிறது. ஏற்கனவே நுண்ணீர் பாசனம் அமைத்து மானியம் பெற்று 7 வருடம் முடிந்து இருந்தால் மீண்டும் புதிதாக மானியங்களை பெற்றுக் கொள்ளலாம். அரசு மானியத்தில் தெளிப்பு நீர் பாசனம் பெற்ற விவசாயிகள் 3 ஆண்டுகள் முடிந்திருந்தால் புதிதாக சொட்டு நீர் அமைக்கவும் மானியம் பெறலாம். இதற்க்கு சிட்டா, அடங்கல், உரிமைச் சான்று, நில வரைபடம், கூட்டு வரைபடம், ரேஷன் கார்டு நகல், ஆதார் கார்டு நகல், வங்கி கணக்கு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -2 ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.
மேலும் விவரங்களுக்கு துங்காவி உள் வட்டத்திற்க்கு தாமோதரன் 9659838787,
மடத்துக்குளம் உள் வட்டத்திற்க்கு- நித்யராஜ் 6382129721 ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.