தாய் மகன் இடையிலான புனித உறவை மிக கொச்சையாக வர்ணித்து, ஆபாசமாக சொற்பொழிவாற்றிய மகாவிஷ்ணுவின் மற்றொரு சர்ச்சை வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே வீடியோவில் முருக பக்தர்களையும் மகாவிஷ்ணு கொந்தளிக்கச் செய்திருக்கிறார். திருப்புகழ் என்பது வழிபாட்டு மற்றும் வாழ்க்கை முறை நூல். அப்படிப்பட்ட திருப்புகழை தந்த அருணகிரிநாதரைப் பற்றி தரக்குறைவாக மகாவிஷ்ணு பேசியிருப்பது ஆன்மீக வட்டாரத்தில் உச்சக்கட்ட கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.