தற்கொலை எண்ணம் வருவதற்கு தாழ்வு மனப்பான்மையும் முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே மற்றவர்களுடன் ஒப்பீடு செய்வதை தவிர்க்க வேண்டும். மற்றவர்களின் பொருளாதார சூழ்நிலை, குடும்ப பின்னணி வேறுவிதமாக இருக்கும். எனவே அவர்களுடன் நம்மை ஒப்பிட்டு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திக் கொள்ளுதல் கூடாது. குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடுவது, மனம் விட்டு பேசுவது, நேரம் செலவிடுவது, அன்றைய விஷயங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் தற்கொலை எண்ணங்களை தடுக்கலாம்.