பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிக்கான ப்ரோமா வீடியோ இன்று (செப்.11) மாலை 5 மணிக்கு வெளியானது. கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் திடீரென விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். இதையடுத்து, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, விஜய் சேதுபதியின் மாஸ் அண்ட் க்ளாஸ் லுக்கில் வெளியாகியுள்ள ப்ரோமா எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது.