யூட்யூபில் படித்து நீட் தேர்வில் 687 மார்க் மாணவன் சாதனை

75பார்த்தது
காங்கேயம் குள்ளம்பாளையம் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்துக் கொண்டே இணையதளம் வழியாக யூடியூபில் நீட் தேர்வு சம்பந்தமான வீடியோக்களை பார்த்து கல்வி பயின்று முதன் முயற்சியிலேயே 720 மதிப்பெண்களுக்கு 687 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளான் மாணவன்.

சஞ்சய் கூறியதாவது: -

எனது பெற்றோர்கள் ரமேஷ் மற்றும் காஞ்சனா. தந்தை ரமேஷ் சொந்தமாக அரிசி கடை வைத்து நடத்தி வருவதாகவும், நான் ஊதியூர்  குள்ளம்பாளையத்தில் உள்ள சாந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டு கல்வி பயின்றேன். எனக்கு மருத்துவ படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் இருந்ததால் மேல்நிலைப்பள்ளி படிப்பின்போதே எனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள தனியார் பயிற்சி மையங்கள் செல்லாமல் எனது சொந்த முயற்சியில் இணையதளம் வழியாக யூடியூபில் நீட் தேர்வு சம்பந்தமான வீடியோக்களை பார்த்து கல்வி பயின்று முதன் முயற்சியிலேயே 720 மதிப்பெண்களுக்கு 687 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளேன். மேலும் இந்த வெற்றிக்கு எனது பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்கள் நண்பர்கள் ஆகியோர் சிறந்த ஊக்கம் கொடுத்தனர். எனவே என்னால் இந்த வெற்றியை பெற முடிந்தது மேலும் இந்த முறை இந்திய அளவில் 25 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், நான் முதல் முயற்சியிலேயே 687 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளேன்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி