நாக்கு என்பது நம் வாய்த்தளத்தில் அமைந்துள்ள தசையாலான உறுப்பு. ஒரு ஆரோக்கியமான நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும், எப்போதும் ஈரமாக இருக்கும். நாக்கை ‘ஒரு நோய் காட்டும் கண்ணாடி’ என்றும் கூறலாம். இதன் மேற்பரப்பில் காணப்படும் நிறம், மாவு போன்ற படிவங்களை வைத்து ரத்தசோகை போன்ற ஊட்டச்சத்துக் குறைபாடு, டைபாய்டு, பூஞ்சைத் தொற்று, மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்கள் மற்றும் புற்றுநோயையும் கணிக்க முடியும்.