மகளிர் பயன்பெறும் வகையில் தமிழக அரசு மகளிர் உதவிக்குழு என்ற ஒரு கட்டமைப்பை உருவாக்கி அதன் அடிப்படையில் குழுவிற்கு ஒரு செயலாளர், ஒரு பொருளாளர் மற்றும் குழு உறுப்பினர்களை கொண்டு இயங்கி வருகிறது.
இந்த குழுவினர் அரசிடமிருந்து கடனாக ஒரு தொகையை பெற்று கொண்டு அதனை தவணை முறையில் திரும்ப செலுத்துவர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த கணபதிபாளையம் பகுதியில் இயங்கி வரும் சுமார் ஏழுக்கும் மேற்பட்ட மகளிர் குழுவினருக்கு ரூ. 8 லட்சம் மதிப்புள்ள தொகைக்கான காசோலையை அரசு அனுப்பியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இக்குழுவின் உடைய தொடர்புடைய பெண் ஒருவர் இக்குழுவிற்கு சேரவேண்டிய ரூ. 8 லட்சம் மதிப்புள்ள காசோலையை முறைகேடாக பயன்படுத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் வரவு செலவுகளை சரிபார்க்கக் கூடிய உதவி திட்ட அலுவலர் கணக்குகளை சரிபார்க்கையில் இந்த காசோலை முறைகேடு குறித்து தெரியவந்தது.
இதனை அடுத்து சம்பந்தப்பட்ட அந்த பெண்ணிடம் மகளிர் குழுவை சார்ந்த பெண்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து தொகையை திருப்பி வாங்கி தருமாறும், காசோலை முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கணபதிப்பாளையம் பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த பெண்கள் காங்கயம் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர்.