சிறப்பு ஆதார் முகாம் அஞ்சல் துறை, ரோட்டரி இணைந்து நடத்தினர்

76பார்த்தது
காங்கேயம் தனியார் மண்டபத்தில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகமை திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன், ரோட்டரி மாவட்ட ரவீந்திரன் தொடங்கிவைத்தனர். ரோட்டரி தலைவர் செல்வராஜ்  தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார். இந்த ஆதார் முகாமில் குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் எடுத்தல், ஆதார் அட்டையில் தொலைபேசி எண் மாற்றுதல், முகவரி மாற்றம் செய்தல், கண்விழி, கைரேகை புதுப்பித்தல் போன்ற ஆதார் சேவைகளும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த முகாமில்  அஞ்சல் துறையின் அனைத்து சேமிப்பு கணக்குகளும் தொடங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில் இன்று சுமார் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து  கொண்டனர். 250 பொதுமக்கள் இன்று இந்த ஆதார் முகாமில் பயன் அடைந்தனர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை திருப்பூர்  தெற்கு அஞ்சல் உட்கோட்டம் உதவி கண்காணிப்பாளர் பழனி, காங்கேயம் ரோட்டரி மணிகண்டன் செய்திருந்தனர். முன்னதாக காங்கேயம் ரோட்டரி செயலாளர் Er நல்லசிவம் வரவேற்புரையாற்றினார். பொருளாளர் செந்தில்குமார் நன்றியுரை ஆற்றினார்.   கூட்டத்தில் திரளான பொதுமக்களும் ரோட்டரி முன்னாள் தலைவர்கள் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் நாளை நடைபெறும் இந்த சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி