வெள்ளகோவில்: கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது

74பார்த்தது
வெள்ளகோவில் அருகே 6.5 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 100 லிட்டர் சாராயம் ஊரலை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே சேனாபதிபாளையம், பெரிய காங்கயம்பாளையம் பகுதிகளில் வீட்டில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அப்பகுதியில் சோதனை செய்தபோது வீட்டில் இருந்து 6.5 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 100 லிட்டர் சாராய ஊரல் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து சாராயம் காய்ச்சி விற்பனை செய்த மனோஜ், செல்வராஜ் ஆகியோரை காங்கேயம் டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவான அருணை போலீசார் தேடி பிடித்தனர்.

தொடர்புடைய செய்தி