வெள்ளக்கோவில்: சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் - இருவர் கைது

15128பார்த்தது
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் தேர் திருவிழாவில் பாட்டு கச்சேரி கேட்டுக் கொண்டிருந்த 17 வயது சிறுமியை கடத்திக்கொண்டு சென்று கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றத்தில் வெள்ளகோவில் சேர்ந்த உணவக ஊழியர் பிரபாகரன் 32 மற்றும் தனியார் நிறுவன ஊழியர் மணிகண்டன் 32 ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவர் மீதும் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம், கொலை முயற்சி மற்றும் போக்சோ சட்டத்தில் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்வழக்கில் மேலும் ஐந்து நபர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி