திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டு தனலட்சுமி நாகராஜ் வார்டு உறுப்பினர் பகுதியில் குப்பைகள் மலை போல் தேங்கி கிடக்கிறது. தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியம் க.புதூர் மன்ற தலைவர் செல்வி ரமேஷ் அவர்கள் பகுதியில் 2 வார்டு தனலட்சுமி நாகராஜ் நம்பர் குடியிருப்பு பகுதிக்கு அருகில் பாலசுப்பிரமணி நகர் குப்பைகள் மலை போல் தேங்கி கிடக்கும் அவல நிலையாக உள்ளது. தொற்றுநோய் பரவ அதிகம் வாய்ப்புள்ளது. நடவடிக்கை எடுக்கப்படுமா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.