தாராபுரம்: சாலை விபத்தில் தந்தை, மகன் பலி!

15472பார்த்தது
தாராபுரம்: சாலை விபத்தில் தந்தை, மகன் பலி!
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (62), இவரது மகன் கருப்புசாமி (41). கருப்பசாமி தாராபுரம் அரசு பொது மருத்துவமனையில் தூய்மை பணியாளராக தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் வேலை செய்துவருகிறார். இதனிடையே கடந்த சனிக்கிழமையன்று கருப்பசாமியும், அவரது தந்தை ஆகிய இருவரும் பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் பூளவாடி பிரிவு அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த இருவரும் சம்பவ இடத்தில் இருவரும் பலியாகினர். தகவலறிந்து வந்த தாராபுரம் நகர காவல் துறையினர், மேற்கண்ட இருவரின் உடல்களையும் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் தாராபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை விசாரணைக்காக கொண்டு சென்றனர். மேற்படி விபத்து குறித்து தாராபுரம் நகர காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி