காங்கேயம் அடுத்த கத்தாங்கண்ணி வயக்காட்டு புதூரைச் சேர்ந்தவர் பிச்சமுத்து. இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை 3 மணி அளவில் தம்புரெட்டி பாளையம் தங்கம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவருக்கும் பிச்சமுத்துவுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாத முத்தியதால் பிச்சமுத்து பாட்டிலை உடைத்து சாமி கண்ணுவை குத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சாமிக்கண்ணு காங்கேயம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் மற்றும் உதவி ஆய்வாளர் கார்த்திக் குமார் தலைமையிலான போலீசார் பிச்சமுத்துவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர.