ஒன் பிளஸ் நிறுவனத்தின் ஒன் பிளஸ் 13 மற்றும் 13 ஆர் ஆகிய 2 ஸ்மார்ட்போன்கள் ஜன. 10 முதல் விற்பனைக்கு வருகிறது. ஒன் பிளஸ் 13-ன் ஆரம்ப விலை ரூ. 69,999 எனவும் 13 ஆர்-ன் ஆரம்ப விலை ரூ. 42,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 13 ஆர் மாடலானது, ஸ்நாப்டிராகன் 8 ஜென் 3 புராசசருடன், 6000 எம்.ஏ.எச் பேட்டரியுடன் வருகிறது. 13 மாடல் ஸ்நாப்டிராகன் 8 எலைட் புராசசருடன் 6000 எம்.ஏ.எச் பேட்டரியுடன் தயாராகியுள்ளது.