மாதவிடாய் காலத்தில் முதல் 2 அல்லது 3 நாட்களுக்கு சிலருக்கு வலி கடுமையாக இருக்கும். இந்த வலியிலிருந்து நிவாரணம் பெற, பலரும் வலி நிவாரணி மாத்திரை உட்கொள்ளகின்றனர். அவ்வாறு எடுத்துக்கொண்டால், வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிக்கும். நெஞ்செரிச்சல், குமட்டல், வயிற்று வலி மற்றும் மார்பு இறுக்கம் போன்ற உபாதைகள் ஏற்படும். மேலும், உடல் பலவீனமடையும், கல்லீரலின் செயல்பாடு பாதிக்கும், வயிற்று புண்கள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.