ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா இ மற்றும் கியூசி 1 ஆகிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கடந்த மாதம் அறிமுகம் செய்திருந்தது. இவற்றுக்கான முன்பதிவை தொடங்கி இருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரூ. 1000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் முன்பதிவு செய்தவர்களுக்கு பிப்ரவரி மாதம் வாகனங்கள் டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலைகள் குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.