பொங்கல் பண்டிகையையொட்டி மாதந்தோறும் பெண்களுக்கு வழங்கப்படும் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகையினை ஜன.10ஆம் தேதி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி இந்த தொகை பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்நிலையில், ஜனவரி 14 முதல் 19 வரை தொடர் விடுமுறை, 11ஆம் தேதி 2-வது சனிக்கிழமை ஆகிய காரணங்களால் வங்கிகள் இயங்காது. எனவே முன்கூட்டியே மகளிர் உரிமைத் தொகை 10ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது.