அவினாசி பழங்கரை கிராமம் சங்கமாம்குளத்தில் சில மாதங் களுக்கு முன் பெய்த மழையால் ஓரளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த குளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒரு வர் பிணம் மிதப்பதாக ஞாயிறன்று அவினாசி போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் அந்த உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் குளத்தில் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. குளத்தில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து அவினாசி போலீசார் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.