தாய்லாந்தைச் சேர்ந்தவர் தனகர்ன் காந்தீ (21). இவர் தனது நண்பரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றுள்ளார். அங்கு மது அருந்தும் போட்டி நடைபெற்றுள்ளது. அதில் ஒரே நேரத்தில் 350 மில்லி லிட்டர் அளவு கொண்ட இரண்டு விஸ்கி பாட்டிலை குடிக்க வேண்டும், அதற்கு ரூ.75,000 பரிசு என பந்தயம் காட்டியுள்ளார். இந்நிலையில் 20 நிமிடத்தில் இரண்டு பாட்டிலையும் காலி செய்த தனகர்ன் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.