நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்பு கேட்க தூது விட்டதாக திருச்சி டிஐஜி வருண் ஐபிஎஸ் பேட்டியளித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த வருண், "சீமான் தனியாக சந்தித்து மன்னிப்பு கேட்பதாக தொழிலதிபர் ஒருவர் மூலமாக தூது விட்டார். அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. சீமான் இனிமேல் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவர் மீது தற்போது கிரிமினல் வழக்கு தொடர்ந்து உள்ளேன். அடுத்தகட்டமாக சிவில் வழக்கு தொடரவிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.