உ.பி., பிரயாக்ராஜ் மாவட்டத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் ஒன்றாக இணைகின்றன. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்கள் புனித நீராடும் கும்பமேளா நடைபெறுகிறது. இந்த வருடம் ஜனவரி 13-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26-ம் தேதி வரை கும்பமேளா நடைபெற உள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை கருதி நீருக்கு அடியில் 328 அடி ஆழம் செல்லக்கூடிய ட்ரோன்களை பயன்படுத்த உள்ளனர். இது குறைந்த வெளிச்சத்தில், 24 மணி நேர கண்காணிப்பை வழங்கும் திறன் கொண்டது.