அவினாசியில் சூறாவளி காற்றுடன் கனமழை

52பார்த்தது
அவினாசியில் சூறாவளி காற்றுடன் கனமழை



அவினாசியில் நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை சுட்டெரிக்கும் வெப்பம் காணப்பட்டது. இந்த நிலையில் மாலை 6 மணியளவில் வானில் கருமேகங்கள் பரவியது. இதையடுத்து பலத்த சூறாவளி காற்று வீசியது. தொடர்ந்து இடி மின்னலுடன் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. ரோட்டின் பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்கியது. சாக் கடை கால்வாய்களில் மழைநீர் நிரம்பி வழிந்தோடியது. நேற்று பெய்த மழையால் வெப்பம் தனிந்து குளிர்ந்த காற்று வீசியது. மாலை 6 மணி முதல் இரவு வெகு நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி