விமான நிலையத்தில் 64. 02 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

74பார்த்தது
திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தோஹா, வியட்நாம், அபுதாபி உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை, மும்பை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கும் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. சர்வதேச நாடுகளில் இருந்து விமானத்தில் வரும் பயணிகள் சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வருவதும் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் மலேசியத் தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு புதன்கிழமை நள்ளிரவு ஏா் ஏசியா விமானம் வந்தது. அப்போது அந்த விமானத்தில் பயணித்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 3 பயணிகள் ரூ. 64. 02 லட்சம் மதிப்புள்ள 898 கிராம் தங்கத்தை கம்பிகள் உள்ளிட்ட வடிவங்களில் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அத்தங்கத்தை பறிமுதல் செய்து, 3 பேரையும் கைதுசெய்து விசாரிக்கின்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி