தாய், தந்தை கண் முன்னே குழந்தை பலி

62பார்த்தது
தாய், தந்தை கண் முன்னே குழந்தை பலி
சேலம்: ஆத்தூர் அருகே கீரிப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜவேல் (24). இவருக்கு ஒன்றரை வயது யோகித் ராஜ் என்கின்ற மகன் உள்ளார். ராஜவேல் ஆத்தூர் தனியார் பள்ளியில் டிரைவராக உள்ளார். இவர் வழக்கம்போல் நேற்று காலை தனது வீட்டில் இருந்து வாகனத்துடன் புறப்பட்டுள்ளார். அப்போது அவரது குழந்தை யோகித் வாகனத்தில் பின்பகுதியில் விளையாடி கொண்டிருப்பதை பார்க்காமல் எதிர்பாராத விதமாக பின்னால் நோக்கி இயக்கியுள்ளார். இதில் பின் சக்கரத்தில் சிக்கி குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

தொடர்புடைய செய்தி