"சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாதா?" - சீமான் சரமாரி கேள்வி

78பார்த்தது
மதுரை விமான நிலையத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும் எனில் மாநில உரிமை பற்றி பேசுவது ஏன்?. பீகார், தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியும். தமிழகத்தில் நடத்த முடியாதா?. இடஒதுக்கீட்டை கொடுப்பதற்கு இருக்கும் அதிகாரம் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு இல்லையா?. தேர்தல் வரும்போது பழைய வேஷத்தை கலைத்துவிட்டு புதிய வேஷம் போட்டுக் கொள்கிறார்கள்” என்றார்.

நன்றி: TamilJanamNews

தொடர்புடைய செய்தி