தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு, 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருப்பதால், உடல் அசவுகரியங்கள் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.